இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பூமி திரைப்படம் பொங்கல் தினத்தன்று ஹாட்ஸ்டார் ஓடிடி இணையதளத்தில் வெளியாவதாக அறிவிப்பு.
இயக்குனர் லக்ஷ்மண் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள திரைப்படம் பூமி . இசையமைப்பாளர் இமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் இது ஜெயம் ரவி 25வது திரைப்படம். மூன்று படங்கள் வெற்றியை தந்த ஜெயம்ரவி அடுத்ததாக வெற்றியை கொடுக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் கடந்த மாதம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் , பொன்மகள்வந்தாள், போன்ற திரைப்படங்கள் ஓடிடி இணையதளத்தில் வெளியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
அந்த வகையில் தற்போது பொங்கல் தினத்தன்று ஹாட்ஸ்டார் ஓடிடி இணையதளத்தில் இந்த பூமி திரைப்படம் நேரடியாக வெளியாக உள்ளதாக நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
பூமி” திரைப்படம் எனது சினிமா பயணத்தில் ஒரு மைல் கல். இப்படம் எனது திரைப்பயணத்தில் 25 வது படம் என்பதை தாண்டி, என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். கோவிட் -19 காலத்தில் ரிலீஸாகும் படங்களின் வரிசையில் இப்படமும் இணைந்திருக்கிறது. உங்களுடன் இணைந்து திரையரங்கில் இப்படத்தை ரசிக்க நினைத்தேன், ஆனால் காலம் வேறொரு திட்டம் வைத்திருக்கிறது. இப்படம் உங்கள் இல்லம் தேடி உங்கள் வரவேற்பறைக்கே வரவுள்ளது. Disney + Hotstar உடன் இணைந்து உங்களின் 2021 பொங்கல் கொண்டாட்டத்தில் பங்குகொள்வதில் நான் பெருமை கொள்கிறேன். நிறைய பண்டிகை காலங்களில் திரையரங்கில் வந்து, எனது திரைப்படத்தை பார்த்து பண்டிகையை கொண்டாடியுள்ளீர்கள். இந்த பொங்கல் பண்டிகை தினத்தில் எனது அழகான திரைப்படத்துடன் உங்கள் வீட்டில் உங்களை சந்திப்பதை, ஆசிர்வாதமாக கருதுகிறேன். என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…
மும்பை : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…
மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…