துப்பாக்கி 2-ம் பாகத்தில் கமல்..? ஏ.ஆர்.முருகதாஸ் மாஸ்டர் பிளான்..!

துப்பாக்கி 2-ம் பாகத்திலும் விஜய்க்கு பதிலாக கமல் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி.காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வசூல் அளவில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது துப்பாக்கி 2-ம் பாகத்திற்கான கதையை தயார் செய்து விட்டதாகவும், இந்த 2-ம் பாகத்திலும் விஜய்க்கு பதிலாக நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இதனை முருகதாஸ் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025