கமலா ஹாரிஸால் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக ஒரு போதும் ஆக முடியாது.
வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருப்பதால், ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதிக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹரிஸ் எனும் பெண்மணி போட்டியிடவுள்ளார். இந்நிலையில் தடுப்பூசி பற்றிய அதிபர் டிரம்ப் கூறும் கருத்துக்களை தான் நம்பப் போவதில்லை என அண்மையில் கமலா ஹரிஸ் கூறினார்.அவரின் இந்த கருத்து அதிபருக்கு கடும் சினத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் கமலா ஹரிஷை தற்பொழுது விமர்சித்து வருகிறார்.
இன்று வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், தடுப்பூசி பற்றி கமலா இழிவாக பேசிவிட்டார் இதன் மூலம் இந்த சாதனையை மக்கள் நம்பாத வண்ணம் அவர் பேசியுள்ளார். இது எனக்கான சாதனை அல்ல, மக்களுக்காக நிகழ்த்தப்பட்ட சாதனை. மக்களை நோயில் இருந்து மீட்பதற்காக தான் இந்த தடுப்பூசி சோதனை மேற்கொள்ளப்பட்டது. நாம் சிகிச்சையிலும் முதன்மையாகத் திகழுகிறோம். நவம்பர் 3 தேர்தலுக்கு முன்பதாக தடுப்பூசி மக்களுக்குக் கிடைத்து விடும் என்பது எதிர்க்கட்சியினரை பதற்றமடைய செய்கிறது.
டிரம்ப் சாதித்துவிட்டார் என நினைப்பவர்கள் தடுப்பூசியை இழிவுபடுத்துவதாக நினைத்து இவ்வாறு பேசுகிறார்கள். இது நாட்டுக்கு நல்லதல்ல, எனவே தடுப்பூசி பற்றி இழிவாக பேசிய கமலா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் கமல் ஹரீஸுக்கு ஜனாதிபதியாக கூடிய எண்ணம் இருக்கிறது. ஆனால் அவருக்கு மக்கள் மீது நம்பிக்கை இல்லை. எனவே கமலா ஹாரிஸால் ஒருபோதும் ஜனாதிபதியாக முடியாது என கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…