தனது முதல் உரையில் தாயை நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ்.
கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு என்னும் பணிகள் மிகவும் இழுபறிக்கு மத்தியில் நடைபெற்ற நிலையில், ஜோ பைடனே இந்த தேர்தலில் வெற்றி பெற்றார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வான நிலையில், அமெரிக்காவின் டெலாவரில் தனது முதல் வெற்றி உரையை நிகழ்த்தியுள்ளார்.
அப்போது பேசிய அவர், ‘என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து அமெரிக்க மக்களுக்கும் நன்றி. வெற்றிக்கு உழைத்த மற்றும் வாக்களித்து ஜனநாயகத்தை காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி என்றும், சிறந்த எதிர்காலத்திற்காக, மக்கள் எமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளீர்கள். இது அமெரிக்காவுக்கு புதிய நாள் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், நம்பிக்கையுடன் அமெரிக்கா வந்த எனது தாயை இந்த தருணத்தில் நினைவு கூறுகிறேன். நான் துணை அதிபராக ஆனதின் பெருமை குறித்து நினைத்து பார்த்திருக்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் முதுகெலும்பாக இருக்கும் பெண்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும், ஒரு பெண்ணை துணை அதிபராக நியமிக்கும் தைரியம் பைடனுக்கும் மட்டுமே உள்ளது என்றும், முதல் பெண், துணை அதிபராக தேர்வாகி இருந்தாலும், இது கடைசியாக இருக்காது. இது துவக்கமே என்றும் தெரிவித்துள்ளார்.
மும்பை : பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் இன்று காலை பாம்பு ஒன்று புகுந்த நிலையில், அந்த பாம்பை…
திருவனந்தபுரம்: முன்னாள் முதலமைச்சரும், சிபிஎம் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார். மாரடைப்பால் திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.யு.டி மருத்துவமனையில் சிகிச்சை…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் 2 போட்டிகளில் இங்கிலாந்து…
டெல்லி : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில்,…
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஜூலை 20 அன்று சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, அதிமுக-பாஜக…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை…