INDvsENG : காயம் காரணமாக நிதிஷ்குமார் ரெட்டி விலகல்…எண்டரி கொடுக்க போகும் பும்ரா!

ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது அவரது இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விலகியுள்ளார்.

nitish kumar reddy

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் 2 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த தொடருக்கான 4-வது போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் வரும் ஜூலை 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்திய அணியில் பெரிய குழப்பமான விஷயமாக இருந்தது என்னவென்றால், பும்ரா இரண்டு போட்டிகளில் விளையாடுவாரா இல்லையா என்பது தான்.

ஏனென்றால், இந்த தொடர் தொடங்கும்போதே பும்ரா இந்த தொடரில் 3 போட்டிகள் மட்டும் தான் விளையாடுவேன் என தெரிவித்திருந்தார். எனவே அவர் 2 போட்டிகள் விளையாடி இருந்த நிலையில், அடுத்ததாக எந்த 1 போட்டியில் விளையாடப்போகிறார் என்கிற கேள்விகள் எழுந்தது. இந்த சூழலில், ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன்-டெண்டுல்கர் ட்ரோபி தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.

நேற்று ஜூலை 20, 2025 அன்று, மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராஃபோர்டில் நடைபெற்ற பயிற்சியின் போது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது அவரது இடது முழங்காலில் லிகமென்ட் காயம் ஏற்பட்டது. இதனை உறுதிப்படுத்திய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), நிதிஷ் இந்தியாவுக்கு திரும்புவார் என்று அறிவித்தது. நிதிஷ் குமார் ரெட்டி, லார்ட்ஸ் டெஸ்டில் முதல் நாளில் தனது முதல் ஓவரில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களான பென் டகெட் மற்றும் ஜாக் க்ராலியை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

மேலும், மூன்றாவது டெஸ்டில் 30 ரன்கள் எடுத்து, ரவீந்திர ஜடேஜாவுடன் 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை பலப்படுத்தினார். ஆனால், இவரது காயம், ஜூலை 23 அன்று தொடங்கும் நான்காவது டெஸ்டுக்கு முன்னதாக இந்திய அணிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.  அவர் விலகியுள்ள நிலையில், ஒரு பக்கம் சோகத்தை ஏற்படுத்தினாலும் மற்றோரு பக்கம் மகிழ்ச்சியான செய்தியாக  அணியில் பும்ரா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நிதிஷின் இடத்தை நிரப்ப, ஷார்துல் தாகூர், குல்தீப் யாதவ், அல்லது அன்ஷுல் கம்போஜ் ஆகியோரில் ஒருவர் அணியில் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதே சமயம, ஆகாஷ் தீப் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் காயம் காரணமாக நான்காவது டெஸ்டில் ஆடுவது சந்தேகமாக உள்ளது. இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் தொடரில் பின்தங்கியுள்ள நிலையில், பும்ராவின் மீள்வருகை அணிக்கு நம்பிக்கை அளிக்கிறது. எனவே, இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி சமநிலை ஆக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்