நாளை வெளியாகும் கார்த்தியின் “சுல்தான்” டீசர்..!

நாளை கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
நடிகர் கார்த்தி இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் சுல்தான். இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழில் அவருக்கு முதல் திரைப்படமாகும் மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படத்திற்கான ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றது.
அதற்குப் பிறகு படத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் படக்குழு வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்திற்கான டீஸர் குறித்து அப்டேட் ஒன்று நேற்று வெளியானதை ஆம், சுல்தான் திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் கார்த்தி ரசிகர்கள் உற்சாகமாக காத்துள்ளார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025