கார்த்தி நடித்து முடித்துள்ள சுல்தான் படத்தின் 90% பணிகள் முடிந்து விட்டதாக தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தெரிவித்துள்ளார்.
கார்த்தி அவர்கள் வெற்றி படமான கைதி படத்தை தொடர்ந்து பாக்யராஜ் கண்ணன் டைரக்ட் செய்கின்ற சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகையாக வலம் வரும் ரஷ்மிகா மந்தனா கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவை யாவும் தடை செய்யப்பட்டது.
சமீபத்தில் கூட இப்பட தயாரிப்பாளரான எஸ்ஆர் பிரபு அவர்கள் கொரோனா காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யவில்லை என்றும், சரியான நேரத்தில் சுல்தான் படம் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது சுல்தான் படம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை தயாரிப்பாளர் பகிர்ந்துள்ளார். அதில் சுல்தான் படத்தின் படப்பிடிப்பு மற்றும் முக்கிய எடிட்டிங் பணிகள் 90% முடிந்து விட்டதாகவும், மீதமுள்ள பணிகள் கொரோனா பிரச்சினை முடிவுக்கு வந்ததும் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் தங்கள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள மிகபெரிய பட்ஜெட் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட படமாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியும் என்றும், படத்தினை ரிலீஸ் செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…