லாஸ்லியாவிற்கு விரைவில் டும் டும்….
லாஸ்லியா விரைவில் திருமணம் செய்ய உள்ளார் என தகவல் பரவி வருகிறது.
தனியார் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் லாஸ்லியா பிரபலமானவர்.
மேலும், ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார் அதில் கதாநாயகியாக இலங்கை பெண்ணான லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், லாஸ்லியா ரசிகர்களை அதிர்ச்சியூட்டும் வகையில் ஒரு தகவல் கசிந்துள்ளது. அதாவது என்னவென்றால், லாஸ்லியாவிற்கு திருமணம் ஆக போகுது என்றும், இதற்காக அவரது பெற்றோர்கள் அவருக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளார்களாம்.
அந்த வகையில், மாப்பிள்ளை கனடாவில் உள்ள தனது நண்பரின் மகனை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற தகவல் தீயாக பரவி வருகிறது.