ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார், இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் மே மாதம் முதல் ஹைதராபாத்தில் நடைபெறும் என கூறப்படுகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் இளம் நடிகையாக வளர்ந்து வரும் பிரியங்கா அருள் மோகன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே நெல்சன் இயக்கத்தில் நடிகை பிரியங்கா அருள் மோகன் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…