அசத்தலான சிக்கன் வடை எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா !

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் சிக்கனும் ஒன்று. இந்த சிக்கனை நாம் விதவிதமாக குழந்தைகளுக்கு சமைத்து கொடுத்தால் அவர்கள் விரும்பி உண்பார்கள்.
இந்த பதிப்பில் சிக்கன் வடை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் -250 கி (எலும்பில்லாதது)
கரம் மசாலா – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் -50 கிராம் (பொடியாக நறுக்கியது )
பிரட் தூள் – 200 கி
உப்பு -தேவையான அளவு
முட்டை -2
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். பின்பு சிக்கனை நன்றாக மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அத்துடன் கரம் மசாலா இஞ்சி பூண்டு விழுது , சிக்கன் என அனைத்தையும் பிசைந்து உருண்டையாக உருட்டி வைத்து கொள்ள வேண்டும். . பின்பு முட்டையின் வெள்ளை கருவை தனியே எடுத்து அதனுடன் பிரட் தூளை நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவேண்டும். உருட்டி உருண்டைகளை இந்த முட்டை கலவைக்குள் முக்கி கடாயில் என்னை ஊற்றி காய்ந்ததும் போட்டு பொன்னிறமானவுடன் பொரித்து எடுக்க வேண்டும்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025