நாளை லெஜண்ட் சரவணன் என்ட்ரி.! வெளியானது புதிய அப்டேட்.!

லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை வெளியீடு.
சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் விளம்பர படங்களில் மட்மே நடித்து வந்ததை தொடர்ந்து தற்போது, ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.
இந்த படத்தை நடிகர் அஜித்குமாரை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய இயக்குனர் ஜே.டி – ஜெரி இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்து வருகிறார். அருளிற்கு ஜோடியாக பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ள்ளார்.
அதிரடி சண்டைக்காட்சிகளுடன் தயாராகும் இப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை காலை 9.55-க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
— Harris Jayaraj (@Jharrisjayaraj) March 3, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
July 30, 2025