சூரரைப்போற்று படத்தை போன்று மாஸ்டரும் ஓடிடியில் ரிலீஸா.? விளக்கமளித்த படக்குழுவினர்.!

மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படாது என்றும், படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் டிரெண்டிங்கில் உள்ளது.
ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த படம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதை போன்று மாஸ்டர் படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுமா என்ற கேள்வியை ரசிகர்கள் பலர் எழுப்பி வந்த நிலையில், மாஸ்டர் படக்குழுவினர் படம் கண்டிப்பாக திரையரங்குகளில் தான் முதலில் வெளிவரும் என்றும், ஓடிடி தளங்கள் எங்களிடம் பேசியது உண்மை என்றும், அதை நாங்கள் மறுத்துவிட்டோம் என்றும், மாஸ்டர் படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து கொண்டாட வேண்டும். படத்தின் ரிலீஸ் தீபாவளிக்கு திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது பொங்கலுக்கு மாஸ்டர் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.