வெங்கட் பிரபு மற்றும் வைபவ் நடித்து முடித்துள்ள லாக்கப் படத்தை ஆகஸ்ட் 14ம் தேதி ஓடிடி பிளாட்பாரமான Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது .
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘லாக்கப்’. அறிமுக இயக்குனரான எஸ். ஜி. சார்லஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார் . இந்த படத்தில் வைபவ் ஹீரோவாகவும், வாணிபோஜன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் இயக்குநர் வெங்கட் பிரபு வில்லனாக நடித்துள்ளார். அரோல் கோரெல்லி இசையமைக்கும் இந்த படத்தை Zee5 தளம் வாங்கியுள்ளதாக கூறப்பட்டது.
தற்போது ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக ரிலீஸ்க்கு தயாராக இருந்த பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது லாக்கப் படத்தையும் Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம் இந்த படத்தை வரும் ஆகஸ்ட் 14ம் தேதி Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…