Maruti Suzuki:மாருதி சுசுகி நிறுவனத்துக்கு ரூ.200 கோடி அபராதம் – என்ன காரணம்? ….!

மாருதி சுசுகி நிறுவனத்துக்கு இந்திய போட்டி ஆணையம் ரூ.200 கோடி அபராதம் விதித்துள்ளது.என்ன காரணம்? என்று கீழே காண்போம்.
நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுசுகி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என இந்தியாவில் எப்போதுமே ஓர் தனித்துவமான வரவேற்பு நிலவி வருகின்றது. எனவேதான் நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் மாருதி சுசுகியும் முன்னிலையில் உள்ளன.
இந்த மாதிரியான சூழ்நிலையில், இந்த பிரமாண்ட நிறுவனம் நியாயமற்ற வணிக நடைமுறைகளில் ஈடுபட்டதாக கூறி ரூ. 200 கோடி அபராதத்தை இந்திய போட்டி ஆணையம் (Competition Commission of India) விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அபராதம் நடவடிக்கை குறித்து இந்திய போட்டி ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “மாருதி சுசுகி நிறுவனம் ஓர் ஒப்பந்தத்தின் வாயிலாக தனது டீலர்களைக் கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, டீலர்கள் சுதந்திரமாக தள்ளுபடி மற்றும் சலுகைகளை வழங்க நிறுவனம் ஓர் கட்டுப்பாட்டை வழங்கியுள்ளதாகவும், மேலும், தங்களின் அனுமதி இன்றி எந்தவொரு சலுகைகையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கக் கூடாது என்றும் மாருதி சுசுகி நிறுவனம் தனது டீலர்களைக் கட்டுப்படுத்தியதாக கூறப்படுகின்றது.
அத்தகைய தள்ளுபடி கட்டுப்பாட்டு கொள்கையை மீறும் எந்தவொரு வியாபாரிக்கும், டீலர்ஷிப் மீது மட்டுமல்லாமல், நேரடி விற்பனை நிர்வாகி, பிராந்திய மேலாளர், ஷோரூம் மேலாளர், டீம் லீடர் உள்ளிட்ட தனிநபர்கள் மீது நிறுவனம் அபராதம் விதிப்பதாக இந்திய போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும்,மாருதி நிறுவனத்தால் போடப்பட்ட ஒப்பந்தமானது, அவர்கள் பரிந்துரைத்த தொகையை தாண்டி வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடியை வழங்குவதைத் தவிர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
இதனைக் கண்கானித்த பெருநிறுவன விவகார அமைச்சகம் இத்தகைய நடவடிக்கைக்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கில் இந்த மிகப் பெரிய அபராதத் தொகையை மாருதிக்கு வழங்கியிருக்கின்றது.ஏனெனில், மாருதியின் இந்த செயல் நுகர்வோரைப் பாதிக்கும் ஓர் செயலாகும். மிக தெளிவாகக் கூற வேண்டுமானால், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடிகள், சலுகைகள் மற்றும் இலவசங்களை வழங்க நிறுவனம் அனுமதிக்கவில்லை என்பதே ஆகும்.
அதுமட்டுமல்லாமல்,நிறுவனம் சலுகைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மட்டும் ஈடுபடவில்லை. தனியாக ஓர் குழு அமைத்து அதன் வாயிலாக பெரியளவு அபராதம் வழங்குதல், அச்சுறுத்தலை வழங்குதல் மற்றும் விநியோகத்தை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான செயல்களிலும் நிறுவனம் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
மாருதி நிறுவனத்தின் இன் இந்த செயல் இந்திய போட்டி ஆணையம் (CCI)-ஆல் உருவாக்கப்பட்ட பிரிவு 3 (4) (e) பிரிவு 3 (1) 2002 ஆகியவற்றிற்கு எதிரானவை ஆகும். இதன் அடிப்படையிலேயே நிர்வாகத்தின்மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025