யாஷ் நடிக்கும் கே. ஜி. எஃப் 2 படத்திலுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
கன்னட சினிமாயுலகம் உச்சத்தில் எட்டியதற்கு முக்கிய காரணமாக கே. ஜி. எஃப் சாப்டர் 1 படத்தை கூறலாம். இந்த படத்தின் மூலம் பிரபலமானவர் தான் கன்னட நடிகரான யாஷ். 2018ல் பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ. 215 கோடிக்களுக்கு வசூல் செய்து சாதனை படைத்தது மட்டுமில்லாமல் டிஜிட்டலில் அதிகம் பேர் பார்த்த படமாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் அங்கேயும் மிகப் பெரும் சாதனையும் படைத்தது. யாஷ் தற்போது கே. ஜி. எஃப் சாப்டர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இந்தப் படத்தை அக்டோபர் 23ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த படத்தில் யாஷூடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இன்னும் 25நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாகவும், அதில் 2 சண்டை காட்சிகளை படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை தவிர்த்து இசை பணிகள் உட்பட அனைத்து இறுதிக்கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள யாஷின் புதிய லுக் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. கோட் சூட்டுடன் உள்ள அந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…