அஜித் நடிக்கவுள்ள 61-வது படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். படத்திற்கு இசையமையாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் வேலைகள் முடிவடைந்து ரிலீஸ் பற்றிய அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அடுத்ததாக நடிகர் அஜித்தின் 61- வது திரைப்படம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது. தல-61 திரைப்படத்தையும் எச்.வினோத் இயக்க உள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இந்த திரைப்படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க உள்ளாராம். தல அஜித் – எச்.வினோத் – போனி கபூர் கூட்டணியில் உருவாக உள்ள மூன்றாவது திரைப்படமாக தல-61 திரைப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.
வலிமை படக்குழு ஒரு முக்கிய பைக் சேசிங் காட்சியை படமாக்க படமாக்க வரும் 20- ஆம் தேதி ரஷ்யா செல்ல உள்ளதாம். அதனை முடித்த பிறகு அநேகமாக அக்டோபர் மாதம் தல-61 படத்தின் படப்பிடிப்புஆரம்பமாகலாம் என கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…