மாஸ்டர் பட நடிகர்களுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் சிறை கைதி உடையில் உள்ள புகைப்படம் வெளியாகியள்ளது. ஆதலால், அவரும் இப்படத்தில் சிறப்பு வேடத்தில் ஏதும் நடிக்கிறாரா என ரசிர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் அணைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீசிற்கு ரெடியாக உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் உள்ளதால் பட ரிலீஸ் தள்ளிபோய்க்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று இப்படத்திலிருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் தீனா உள்ளிட்ட மாஸ்டர் பட துணை நடிகர்கள் சிறை கைதிகள் உடையில் உள்ளனர். அதில், இயக்குனர் லோகேஷ் கனகராஜும் சிறை கைதி உடையில் உள்ளார். ஆதலால், இயக்குனர் லோகேஷ் கனகராஜும் இப்படத்தில் சிறப்பு வேடத்தில் ஏதும் நடிக்கிறாரா? இல்லை, இது வேறு ஏதேனும் புகைப்படமா என ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.
வெளியான இந்த புகைப்படம் மாஸ்டர் படக்குழுவிற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால், பெரும்பாலான விஜய் ரசிகர்கள் இந்த போட்டோவை ஷேர் செய்யவேண்டாம் என கேட்டுக்கொண்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…