விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் உலகளவில் 260 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் தினத்தனத்தை முன்னிட்டு கடந்த மாதம் 13 ஆம் தேதி திரையரங்குகளில் 50 % இருக்கைகளுடன் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனனும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 19 வது நாளாக வெற்றிநடை போட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு 50 % பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு திரையரங்குகளில் முதன் முதலாக மாஸ்டர் படம் தான் வெளியானது. இந்த படம் வெளியாகி விநியோகத்தஸர்கள், மற்றும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த மாஸ்டர் திரைப்படம் உலகளவில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது ஆம், தற்போது வரை 260 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டும் 141 கோடி வசூல் செய்துள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…