உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த 15 நாட்களாக போர் நடந்து வருகிறது. இந்த போரின் மத்தியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உக்ரைன் குடிமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உக்ரைனில் நடந்த போரில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையே சண்டை அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரஷ்யா மீது மிகப்பெரிய நிறுவனங்கள் பொருளாதார தடையை தொடங்கியுள்ளன. இந்நிலையில், ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது. ஸ்டார்பக்ஸ், கோக், பெப்சி ஆகியவையை தொடர்ந்து மற்றொரு அமெரிக்க நிறுவனமான மெக்டொனால்டு ரஷ்யாவில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்களையும் தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
McDonald’s இன் தலைவர் மற்றும் CEO கிறிஸ் கெம்ப்சின்ஸ்கி கூறுகையில், ரஷ்யாவில் உள்ள 850 உணவகங்களை தற்காலிகமாக மூடுவதாகவும், ரஷ்யாவில் உள்ள 62,000 ஊழியர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்கப்படும். ரஷ்யாவில் உள்ள விற்பனை நிலையங்களை எப்போது திறப்பது என்று சொல்வது கடினம் என தெரிவித்தார். மெக்டொனால்ட்ஸ் ரஷ்யாவில் மொத்தம் 850 உணவகங்களைக் கொண்டுள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் மெக்டொனால்ட்ஸில் வேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…