அமெரிக்கர்களின் தகவல்களை டிக் டாக் செயலி மூலம் பயன்படுத்தப்படலாம் என அமெரிக்காவின் இணையப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
நேற்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் அறிக்கையில் டிக் டாக் செயலியை அரசு தீவிரமாகக் கவனித்து வருகிறது. எங்களது முடிவுகளை தொடர்ந்து பரிசீலனை செய்வோம் என கூறப்பட்டது. அதிபர் டிரம்ப் அமெரிக்காவில் டிக் டாக் தடை செய்யப்படும் என கூறிய நிலையில், டிக்டாக்கின் அமெரிக்கச் செயல்பாடுகளை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த பேச்சு வார்த்தைகளை நிறுத்தியுள்ளது எனவும், அமெரிக்காவில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியதாக கூறி வெள்ளை மாளிகை ஆதரவைப் பெற பைட்டான்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், சீனா அரசுக்கு அமெரிக்கர்களின் தகவல்களை அளிப்பதாக வைக்கப்படும் குற்றச்சாட்டை டிக் டாக் மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…
டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…
டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…