அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி செலுத்த உள்ள ஜோ பைடன்

துணை அதிபர் மைக் பென்ஸ் இன்று கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள உள்ளதாகவும் ,அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் அடுத்த வாரம் தடுப்பூசி செலுத்த உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
இதனிடையே இன்று கொரோனா வைரஸ் தடுப்பூசியை துணை அதிபர் மைக் பென்ஸ் செலுத்திக் கொள்ள உள்ளார்.மேலும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் அடுத்த வாரம் தடுப்பூசி செலுத்த உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”அமெரிக்க மக்களிடையே கொரோனா தடுப்பூசி மீதான நம்பிக்கையை வளர்ப்பதற்காக” தடுப்பூசி செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ள அதிபர் டிரம்ப் அமெரிக்கர்களை ஊக்குவிப்பார் என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கெய்லீ மெக்னானி கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025