சார்ஜ் போட்டுக்கொண்டே பாட்டு கேட்ட 14 வயது சிறுமி மொபைல் வெடித்து உயிரிழப்பு..!

கஜகஸ்தான் நாட்டிலுள்ள பாஸ்தொப் பகுதியை சேர்ந்தவர் அலுவா அப்லஸ்பெண். 14 வயதாகும் இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது சோனை தலையணைக்கு அருகில் சார்ஜ் போட்டுவிட்டு, ஹெட்போனில் பாட்டு கேட்டுள்ளார்.
தலையணையில் இருந்த அந்த போன் திடீரென சூடாகி வெடித்தது. இதனால் தலையணையில் தீப்பிடித்து, அந்த சிறுமியின் உடல் முழுவதும் பரவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உன்னை கண்ட அவர்களின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, கதறினர். இதனையடுத்து காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். சிறுமி இறந்த இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025