அசுரன் பட நடிகர் கொரோனா தொற்றால் காலமானார்…..!

நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இந்த வைரஸால் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் பாதிக்கப்படுகின்றனர். சமீப நாட்களாக திரையுலகப் பிரபலங்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.
அந்தவகையில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர், புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிகுழு, அசுரன், காலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025