உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிற நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிர தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், ஏப்ரல் 14-ம் தேதி வரை போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு, தற்போது மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து வசதிகள் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் பேருந்து என எந்த சேவையும் செயல்படவில்லை. இந்நிலையில், கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து, நோய்வாய்ப்பட்டு கிடக்கும் தனது மகனை பார்ப்பதற்காக, 6 மாநிலங்களை கடந்து, 2,700 கிலோ மீட்டர் தூரம் அவரது தாய் பயணித்துள்ளார்.
இந்த பயணத்தை அவர் காரிலேயே கலந்து சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது இவருடன் இவரது மருமகள் மற்றும் மற்றுமொரு உறவினரும் இருந்துள்ளார். இவர்களுடன் இணைந்து மூன்று நாட்கள் பயணித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.
இது குறித்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பிடிஐ செய்தியாளரிடம் பேசிய ஷீலாம்மா வாசன், நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனின் உடல்நிலை தற்போது மேம்பட்டு வருவதாக கூறியுள்ளார். இவரது மகன் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார்.
இவர் பிப்ரவரி மாத விடுப்பில் கிராமத்திற்கு வந்த இவர் ஊரை விட்டு சென்ற சில நாட்களுக்கு பிறகு தனது தாயையும் மனைவியையும் சந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் , கடவுளின் ஆசீர்வாதத்தால் எங்கும் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
அருண்குமார் நிலை குறித்து ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில், பணியாற்றும் கேரளா மருத்துவர் ஒருவர் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து கேரளாவில் இருந்து தமிழகம் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் வழியாக ராஜஸ்தானை நோக்கி காரில் பயணிக்க முடிவு செய்துள்ளார்களாம்.
இவர்கள், மத்திய அமைச்சர் வி.முரளிதரன், கேரளா முதல்வர் பினராயி விஜயன் மற்றும் உம்மன் சாண்டி ஆகியோரின் உதவியுடன், மாநிலங்களை தாண்டி பயணம் செய்ய அனுமதி பெற்றுள்ளனர்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…