பிறந்த நாளன்று விலகல் பரிசு! ஹர்சிம்ரத் பாதல்..விலகலுக்கு காரணம்??..

Default Image

பிரதம மோடியின் பிறந்த நாளான நேற்று அவரது கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஷிரோமணி அகாலி தளம் கட்சி மந்திரி ராஜினாமா செய்துள்ளார்.  மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஹர்சிம்ரத் பாதல் அங்கம் வகிக்கும் ஷிரோமணி அகாலி தளம் கட்சி உள்ளது.

இந்நிலையில், விவசாயிகளுக்கு எதிரான அவசர சட்டத்தை நிறைவேற்ற ஆளும் பாரதிய ஜனதா கட்சி  முயல்வதாக கூட்டணி கட்சியான  ஷிரோமணி அகாலி தளம் கட்சி  குற்றம்சாட்டியது. இத்தகைய ஒரு மசோதா தங்களின் கட்சிக்கொள்கைக்கு எதிரானது என்று அக்கட்சியன் சார்பில் மக்களவையில் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்தார். இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் துறை மந்திரியாக இருந்த  ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பான தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற அலுவலகத்தில் அவர் அளித்தார். இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்த அவர், ஆயிரக்கணக்கான விவசாயிகள் வீதிகளில் இருக்கின்றனர். அனால், விவசாயிகளின் குறைகளுக்கு தீர்வு காணாமல் சபைகளில் வெறும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்க நான் விரும்பவில்லை, அதனால் தான் நான் ராஜினாமா செய்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay
TamilagaVettriKazhagam