மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் இந்த ஆண்டில் ரூ.47,000 கோடிக்கு மேல் திரட்டியுள்ளது. ஆனால் சீனாவின் வாட்டர் கிங் என்று அழைக்கப்படும் தொழிலதிபர் ஜாங் ஷான்ஷன், ரிலையன்ஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானியை தோற்கடித்து ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராக மாறிவிட்டார்.
உலகின் மிகப் பெரிய பணக்காரர் பட்டியலை செப்டம்பர் மாதம் ப்ளூம்பெர்க் பில்லியனர் வெளியிட்டது. இதில் உலகின் பணக்காரர்களின் பட்டியலில்ஜாங் ஷான்ஷன் 17 வது இடத்தைப் பிடித்தார். முகேஷ் அம்பானிக்குப் பிறகு ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் என்று அழைக்கப்பட்டார். ஜாங் ஷான்ஷனின் சொத்து வளர்ந்து வரும் வேகம் அவருக்கு ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மீது ஒரு பெரிய நெருக்கடியை கொடுக்கக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில், இப்போது அது நடந்துள்ளது.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஜாங் ஷான்ஷன் சொத்து இந்த ஆண்டு 70.9 பில்லியன் டாலரிலிருந்து 77.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இதனால் அவர் உலகின் 11 வது பணக்காரர் இடத்தை பிடித்துள்ளார். 12-வது இடத்தில் ரிலையன்ஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி உள்ளார். ஷான்ஷன் பாட்டில் வாட்டர், கொரோனா தடுப்பூசி போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ளார். ஜாங் ஷான்ஷன் இப்போது ஆசியாவின் பணக்காரர் மட்டுமல்ல, சீனாவின் பணக்காரரும் ஆவார்.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…