துல்க்கர், தனது தந்தை மம்மூட்டி 150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்று கூறியுள்ளார்
நடிகர் துல்க்கர் சல்மான், மாணவர்களுடன் சமீபத்தில் பேசிய உரையாடலில், தனது அப்பா மம்மூட்டி 150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்றும், அவர் வெளியே செல்லாமல் எவ்வளவு நாட்கள் தன்னால் இருக்க முடியும் என்பதை தனது அப்பா பார்க்க விரும்புவதாகவும், அவர் தனக்கு தானே சவால் விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் துல்க்கர் தனது தந்தையை வெளியே ஒரு டிரைவுக்காக செல்ல அழைத்த போது அவர் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் துல்க்கர் தனக்கு வீட்டில் இருக்க சலிப்பாக இருப்பதாகவும், வெளியே செல்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் உரையாடலில் கூறியுள்ளார். மம்மூட்டி தனது ஊரடங்கை பல்வேறு வகையில் கழித்து வருகிறார். சமீபத்தில் கூட மம்மூட்டி தனது கேமரா மூலம் கிளக் செய்த அழகான புகைப்படங்களை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…