கமலா ஹாரிஸின் அம்மா, அவர் மற்றும் அவரின் தங்கை மாயாவிற்கு இட்லி பிடிக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 90 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், துணை அதிபர் வேட்பாளராக ஒரு பெண்ணைத்தான் நியமிக்கவுள்ளதாக தெரிவித்தார். அந்தவகையில், இந்திய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை துணை அதிபராக நியமிக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பின் மக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
நேற்று இந்தியாவின் 74 -ம் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. அதற்கு வாழ்த்து தெரிவித்த கமலா ஹாரிஸ், “வரலாறு மற்றும் கலாச்சாம் மட்டுமல்லாமல் இன்னும் சில விஷயங்களில் இந்தியா, அமெரிக்கா நெருக்கமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அவரின் வாழ்க்கையில் நடந்த சில அனுபவங்களையம் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர், அவரின் தாயார் ஷாயமளா, அவரின் 19 வயதில் காலிபோர்னியா வந்தடைந்ததார். அப்பொழுது அவரிடம் உடைமைகள் அவ்வளவு நிறைய இல்லை என்றாழும், அவரின் பெற்றோரிடம் இருந்து நிறைய பாடங்களை கற்றெடுத்து கலிபோர்னியா வந்தார்.
மேலும், தான் எங்கிருந்து வந்தார் என்பதை எனக்கும், எனது சகோதரி மாயாவுக்கும் புரிய, எங்களை அடிக்கடி இந்தியா அழைத்துச் சென்று, அவரின் வம்சாவளி பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என நினைப்பார். தென்னிந்திய உணவுகள் மீது அதிகளவில் ஆர்வம் காட்டியதாகவும், அவருக்கு தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லியின் பெருமையைப் பற்றி அடிக்கடி கூறுவார் எனவும், எங்களுக்கு இட்லி பிடிக்க வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை எனது அம்மா மேற்கொண்டதாகவும், தனது தாத்தாவுடன் சென்னையில் நீண்ட தூரம் நடைபயணம் மேற்கொள்வேன் எனவும் தெரிவித்தார்.
கமலா ஹாரிஸின் தாத்தா, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட மிகப்பெரிய வீரர்களை பற்றி நிறைய கூறுவார் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து மீண்டும் தொடங்க வேண்டியது நமது பொறுப்பு எனவும், நான் இந்த இடத்தில் தற்போது நிற்பதற்கு அதுபோன்ற பாடங்கள் தான் காரணம் என உருக்கமாக கமலா ஹாரிஸ் கூறினார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…
யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது. இதில் பலர்…
சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…