அப்பாவாகும் செய்தியை தனது பிறந்தநாளை முன்னிட்டு உடைத்த நகுல்.!

Published by
Ragi

குழந்தைக்கு அப்பாவாகும் செய்தியை தனது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷலாக நகுல் ஜெய்தேவ் அறிவித்துள்ளார்.

2008ல் வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நகுல் ஜெய்தேவ் . அதில் ஹீரோயினாக சுனைனா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அடுத்த ஆண்டில் அவருடன் மாசிலாமணி படத்திலும் நடித்தார். அதனையடுத்து தமிழ் சினிமாவில் அறியப்படும் கதாநாயகனாக திகழ்ந்து பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 10 வருடங்கள் கழித்து மீண்டும் சுனைனாவுடன் இணைந்து ‘எரியும் கண்ணாடி’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றைய தினம் தனது 36வது பிறந்தநாளை கொண்டாடிய நகுல் தான் அப்பாவாகும் செய்தியை அறிவித்துள்ளார். நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வருட பிறந்தநாள் தனக்கும், அவரது மனைவியான ஸ்ருதிக்கும் மிகவும் ஸ்பெஷல் என்றும், இறுதியாக தனது மனைவி ஒரு குழந்தைக்கு அம்மாவாக போவதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று அறிவித்துள்ளார். இவருக்கு ஸ்ருதி என்பவருடன் 2016ல் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பலர் இந்த தம்பதியருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

Published by
Ragi

Recent Posts

ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!

ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…

7 minutes ago

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மாதிரி விஜய் அரசியல் செய்யணும்- ரோஜா அட்வைஸ்!

திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…

48 minutes ago

INDvsENG : ‘வா வந்து பாரு’…ஆர்ச்சருக்கு அலர்ட் கொடுத்த ரிஷப் பண்ட்!

லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…

2 hours ago

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…

2 hours ago

பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸ் எடப்பாடி பழனிசாமி- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…

3 hours ago

“படகுகளில் த.வெ.க. பெயர்.., மீனவர்களை மிரட்டும் தி.மு.க. அரசு” – விஜய் கண்டனம்.!

சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஏற்கெனவே…

3 hours ago