தளபதி-65 படத்தில் ஒளிப்பதிவாளராக நண்பன் படத்தில் பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளார் . மேலும் ‘தளபதி65’ படத்தில் பிரபல காமெடி நடிகர்களான யோகி பாபு மற்றும்VTV கணேஷ் ஆகியோரும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.மேலும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே அல்லது ரஷ்மிகா மந்தானா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்கவிருக்கும் தளபதி-65 படத்தின் ஒளிப்பதிவாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதாவது தளபதி 65 படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.அவர் பகிர்ந்த பதிவில் ,இந்த அற்புதமான மனிதருடன் இன்னொரு பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.நண்பன் படத்தினை தொடர்ந்து பான் இந்தியா படமாக உருவாகும் இருக்கும் தளபதி-65 படத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் ,நீங்களும் தயாராகுங்கள் என்று மனோஜ் பரமஹம்சா குறிப்பிட்டுள்ளார்.இவர் ஏற்கனவே விஜய்யின் நண்பன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அது மட்டுமின்றி விண்ணை தாண்டி வருவாயா, பிரபாஸின் ராதே ஷியாம் ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…