ஒரு அரை சதத்தின் மூலம் நாதன் கோல்டர் இவ்வளவு சாதனையா!

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா,வெஸ்ட் இண்டீஸ் அணி மோதியது. போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா 49 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் குவித்தது.
பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டை இழந்து 50 ஓவரில் 273 ரன்கள் எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் நாதன் கோல்டர் 60 பந்தில் 92 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற பெரும் உதவியாக இருந்தார்.
அந்த 92 ரன்னில் 8 பவுண்டரி , 4 சிக்ஸர் அடங்கும்.அவர் அரை சதம் அடித்ததன் மூலம் நேற்று பல சாதனைகள் புரிந்தார்.
- உலகக்கோப்பையில் எட்டாவது இடத்தில் இறங்கி அரை சதம் அடித்த 15 -வது வீரர் நாதன் கோல்டர்.
- உலகக்கோப்பையில் எட்டாவது இடத்தில் இறங்கி அரை சதம் அடித்த முதல் ஆஸ்திரேலியா வீரர் நாதன் கோல்டர்.
- நாதன் கோல்டர் உலகக்கோப்பையில் அடித்த முதல் அரை சதம்.
- ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணியில் எட்டாவது இடத்தில் இறங்கி அரை சதம் அடித்த 14 -வது வீரர் நாதன் கோல்டர் .
லேட்டஸ்ட் செய்திகள்
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025