மாமனிதன் படத்திற்கு தேசிய விருது நிச்சயம்- ஆர்.கே.சுரேஷ்.!

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராம சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்திரி நடித்துள்ளார். குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாள் இருக்கிறது.
இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் இணைந்து இசையமைத் துள்ளார்கள். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டீசர் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம்.
மேலும், இந்த படம் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இந்த படம் மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தமிழகம் மற்றும் கேரள தியேட்டர் வெளியீட்டு உரிமையை நடிகர் ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9 கைப்பற்றியுள்ளது.
இந்த படம் குறித்து ஆர்.கே சுரேஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் “நான் பார்த்து வியந்த படம் தர்மதுரை அதன்பின்பு இப்படி ஒரு படமா மாமனிதன் என்று வியந்தேன். நன்றிகள் பல இயக்குனர் சீனு ராமசாமி அவர்களுக்கு. மற்றும் மாமனிதன் மட்டுமல்ல மகா நடிகன் நீ விஜய் சேதுபதி என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தேசிய விருது நிச்சயம்” என தெரிவித்துள்ளார்.
நான் பார்த்து வியந்த படம் தர்மதுரை அதன்பின்பு இப்படி ஒரு படமா #மாமனிதன் என்று வியந்தேன். நன்றிகள் பல இயக்குனர் சீனு ராமசாமி அவர்களுக்கு. மற்றும் மாமனிதன் மட்டுமல்ல மகா நடிகன் நீ @VijaySethuOffl சேது ????என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தேசிய விருது நிச்சயம் pic.twitter.com/JYeOdE9c1O
— RK SURESH (@studio9_suresh) March 16, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025