விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா கையில் ஒரு குழந்தையுடன் இருப்பது போல் இருக்க, எனது வருங்கால குழந்தைகளின் தாய்க்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக உயர்ந்து கொண்டிருப்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயனதாரா . சரத் குமார் நடித்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் பல மலையாள படங்களில் நடித்தது மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான அஜித், விஜய், ரஜினி, சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலருடனும் நடித்துள்ளார். தற்போது ஆர். ஜே. பாலாஜியுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி நயனதாரா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
மேலும் இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறியது அனைவரும் அறிந்ததே. வழக்கமாக இருவரும் சுற்றுலா சென்று புகைப்படங்களை ஷேர் செய்யும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருங்கால மனைவிக்கு அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நயன்தாரா கையில் ஒரு குழந்தையுடன் இருப்பது போல் இருக்க, எனது வருங்கால குழந்தைகளின் தாய்க்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…