நடிகை நயன்-விக்னேஷ் இடையே விரிசலா….?முனுமுனுக்கும் கோலிவூட்

Published by
kavitha
  • தமிழ் திரையுலகில் பிரபலமாக இயக்குநர் விக்னேஷ் சிவன் அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை நயந்தாரா இவர்கள் இருவரும் காதலித்து வருகின்றனர்
  • தற்பொழுது நடிகை நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது.

 

நானும் ரவுடிதான் படத்தில் பணியாற்றிய போது இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை இருவருக்கும் காதல் மலர்ந்தது.  நாங்கள் காதலர்கள் என்று வெளிப்படையாக இருவரும் சொல்லாவிட்டாலும் பிறந்தநாள் மற்றும் பண்டிகைகளை ஒன்றாக கொண்டாடிய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிடுவார்.

Image result for nayanthara vignesh shivan breakup

இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.படத்தில் நடித்து கொண்டிருக்கும் பொழுதேசுசீந்திரம் கோவில், பகவதி அம்மன் கோவிலுக்கு விக்னேஷ் சிவனுடன் சென்று தரிசனம் செய்து வந்தார். இதேபோல் தான் கிறிஸ்துமஸ் பண்டிகையையும் தன்னுடைய காதலருடன் இணைந்து கொண்டாடினார். ஆனால் நயனின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படத்தில் காதலன் விக்னேஷ் சிவன் இடம்பெறவில்லை.இதேபோல சமீபத்தில் நடைபெற்ற ஜீ தமிழ் தொலைக்காட்சி விருது விழாற்கு நடிகை நயன்தாரா மட்டும் கலந்து கொண்டார்.

இதனைக் கவனித்த சிலர் இவர்கள் இருவருக்குள்ளும் ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர்.மேலும்  விக்னேஷ் சிவன் திருமணத்துக்கு வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது அதற்கு  நயன்தாரா  மறுப்பு தெரிவிக்கவே இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று சிலர் தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

இந்த தகவலால் இருவருடைய ரசிகர்களும் குழப்படமடைந்தனர்.இதுகுறித்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் இது குறித்து விசாரிக்கையில் வெளியான தகவல் முற்றிலும் பொய் என்று மறுத்துவிட்டனர். நடிகை நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் இருந்ததாகவும் வெளியான புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தான் எடுத்தார் என்று கூறப்பட்டது.மேலும் அவர் பட வேலைகளில் பிசியக இருப்பதால் தான் ஜீ தொலைக்காட்சி நடத்தும் விருது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

Published by
kavitha

Recent Posts

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

7 minutes ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

2 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

2 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

3 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

4 hours ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

4 hours ago