கடந்த ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி, நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூட்டில் 57 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் நடத்திய நபர் துப்பாக்கிச்சூட்டை முகநூல் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பினார்.
அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா, இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் தான் என உறுதி செய்தார். இதனையடுத்து, அந்நாட்டில் துப்பாக்கி பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பயங்கரவாதியான பிரெண்டன் டாரண்ட் (வயது 25) தான் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்தார். இதனையடுத்து, இவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
பிரெண்டன் டாரண்ட், ஜூன் மாதம் நடைபெற்ற விசாரணையின் போது தன்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்தார். இந்நிலையில், கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், நீதிமன்றத்திற்கு நீதிபதிகளோ, குற்றவாளிகளோ வார இயலாத நிலையில், பிரெண்டன் டாரண்டையும் நேரடியாக கோர்ட்டுக்கு அழைத்து வராமல் காணொலி காட்சி மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரது வக்கீல்களும் காணொலி காட்சி மூலமாகவே ஆஜராகி வாதாடினர்.
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…