நீரவ் மோடியை இந்தியா அழைத்து வருவதற்கான வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, கடன் தொகையை செலுத்தாமல் பிரிட்டனில் தலைமறைவாக இருந்தாா். அவர் இருக்குமிடத்தை அறிந்த அந்நாட்டு, காவல்துறையினா் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் 19 ஆம் தேதி கைது செய்து வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கையை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து வழக்கு, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை, நேற்று மீண்டும் வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பா் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், நீரவ் மோடியின் காவலும் நவம்பா் 3 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாகஉத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…