தென் ஆப்பிரிக்காவில் சில வௌவால்களிடம் ‘நியோகோவ்’ எனும் வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரசும் அதன் மற்றொரு பிரிவான பிடிஎஃப்-2180 கோவ் ஆகியவையும் மனிதர்களை பாதிக்கக் கூடும் என சீன ஆய்வாளர்கள் புதிய ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த இரண்டு வருடமாக தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் பல இடங்களில் பரவி வருகிறது.
அதே சமயம் தென் ஆப்பிரிக்காவில் சில வௌவால்களிடம் ‘நியோகோவ்’ எனும் வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ்கள் புது வகை வைரஸ்கள் அல்ல. இது விலங்குகளிடம் பரவக்கூடியவை. ஆனால் இந்த வைரசும் அதன் மற்றொரு பிரிவான பிடிஎஃப்-2180 கோவ் ஆகியவையும் மனிதர்களை பாதிக்கக் கூடும் என சீன ஆய்வாளர்கள் புதிய ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில, இந்த வைரஸ் கொலைகார வைரஸ். வேகமாக பரவி கூடியது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டால் மூன்றில் ஒருவர் உயிரிழக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில் நியோகோவ் பற்றி இப்போது கவலைப்படத் தேவையில்லை. இந்த வைரஸ் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்குமா என்று இன்னும் ஆய்வு செய்ய வேண்டி இருப்பதாக தெரிவித்துள்ளது.
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…