விருமன் படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரின் மகள் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என அழைக்கப்படுபவர் ஷங்கர். இவரின் இளைய மகள் அதிதி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். அதாவது, கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான “கொம்பன்” படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்துக்கு “விருமன்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் மூலம் அதிதி ஷங்கர் கதாநாயகியாக களமிறங்குகிறார். இந்த படத்தின் அறிவிப்பு நேற்று போஸ்டருடன் வெளியானது. படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…