பாகிஸ்தானில் வழக்கமான பயிற்சி பணியின் போது PAF விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பாகிஸ்தானின் விமானப்படை விமானம் ஆகிய பிஏஎஃப் எனும் விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, விபத்துக்குள்ளாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து விமான படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானி விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றபட்டுள்ளதாகவும் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும், தரையில் விழுந்த விமானத்தால் எந்த ஒரு உயிர் சேதங்களோ அல்லது சொத்து இழப்புக்களோ ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும், இந்த விபத்து இந்த ஆண்டு துவங்கியதிலிருந்து ஐந்தாவது விமான விபத்து எனவும், இது குறித்து விசாரிக்க பொதுஜன வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் 23-ஆம் தேதி அணிவகுப்பு ஒத்திகையில் இஸ்லாமாபாத்தில் வைத்து ஒரு பிஏஎஃப் விமானம் விபத்துக்குள்ளாகியது. இதில் அக்ரம் எனும் கமாண்டர் உயிரிழந்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஒரு பிஏஎஃப் விமானத்தின் பயிற்சி நடக்கையில் விமானம் விபத்துக்குள்ளாகியதாகவும், அதே மாதத்தில் மற்றும் ஒரு வழக்கமான பயிற்சி பணியில் இருந்த பிஏஎஃப் மிராஜ் விமானம் லாகூர்-முல்தான் மோட்டார் அருகே விபத்துக்குள்ளாகியதாகவும், இந்த இரண்டு நிகழ்வுகளிலும் விமானிகள் பாதுகாப்பாக வெளியேற்றபட்டதாகவும் எந்த ஒரு உயிர் சேதமும் இல்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அதற்கு முன்பதாக ஜனவரி மாதம் மியான் வாலி என்னும் இடத்தின் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த PAF T-77 எனும் விமானம் விபத்துக்குள்ளாகியதில் அதற்குள் இருந்த படைத்தலைவர் ஹாரிஸ் பின் காலித் மற்றும் விமானப்படை அதிகாரி ரஹ்மான் ஆகிய இருவர் அந்த விபத்தில் உயிரிழந்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வழக்கமான பயிற்சியின்போது விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது இத்துடன் ஐந்தாவது முறை, எனவே இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…