2 கோயில்களைப் பார்வையிட 139 பக்தர்களுக்கு விசா வழங்கிய பாகிஸ்தான்..!

டிசம்பர் மாதத்தில் இரண்டு முக்கிய இந்து கோவில்களைப் பார்வையிட பாகிஸ்தான் இந்திய பக்தர்களின் இரண்டு குழுக்களுக்கு 139 விசாக்களை வழங்கியுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாபின் சக்வால் மாவட்டத்தில் டிசம்பர் 23-29 வரை இந்திய இந்து பக்தர்கள் அடங்கிய குழுவுக்கு பாகிஸ்தான் நேற்று முன்தினம் விசா வழங்கியது.
கட்டாஸ் ராஜ் கோயில் இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் கோவில், இந்த கோவில் ஒரு குளத்தால் சூழப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான இந்திய சீக்கிய மற்றும் இந்து பக்தர்கள் பாகிஸ்தானுக்கு வருகை தருகின்றனர். 300 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோயில், உலகெங்கிலும் உள்ள பக்தர்களுக்கு இது ஒரு புனித இடமாகும்.
1708 இல் லாகூரில் பிறந்த சாந்த் சதரம் சாஹிப் என்பவரால் 1786 ஆம் ஆண்டில் ஷதானி தர்பார் நிறுவப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள ஷதானி தர்பார் மற்றும் கட்டாஸ் ராஜ் கோயில்களைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025