காவல் பணி மற்றும் தீயணைப்பு படை சேவையில் ஈடுபடும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு அவைகள் ஓய்வு பெற்ற பின் ஓய்வு ஊதியம் வழங்க போலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
பொதுவாக அரசு வேலை செய்பவர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெற்ற பின்பு அவர்களது வாழ்க்கை மேம்பாட்டிற்காக அரசு ஓய்வூதியம் வழங்குவது உண்டு. இது மனிதர்களுக்கு தான் அரசு இதுவரை வழங்கி வந்தது. ஆனால் போலந்து நாட்டில் எல்லைப் பகுதியில் காவல் பணி மற்றும் தீயணைப்பு படை சேவையில் ஈடுபடும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு அவைகள் ஓய்வு பெற்ற பின் ஓய்வு ஊதியம் வழங்க போலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
பொதுவாக நாய்கள் மற்றும் குதிரைகள் பணியில் இருக்கும்போது சிறந்த முறையில் கவனிக்கப்படுகிறது ஓய்வுக்குப் பின் இந்த நாய்கள் அல்லது குதிரைகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அல்லது அவற்றை தத்தெடுக்க விரும்பும் அவர்களிடம் ஒப்படைக்கப் படுகின்றன.
பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் வேண்டுகோளின் பேரில் இதற்காக உள்துறை அமைச்சகம் ஒரு புதிய சட்டத்தை முன்மொழிந்தது. இந்த சட்டத்தின்கீழ் நாய்கள் மற்றும் குதிரைகள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் அதற்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்தையும், சமூகப் பாதுகாப்பையும் வழங்குவதற்கான ஓய்வூதியம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து போலந்து நாட்டின் உள்துறை அமைச்சர் மோரிஸ் கம்மின்ஸ்கி கூறுகையில், இந்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்க வேண்டும் என்றும், மேலும் இந்த திட்டமானது இந்த ஆண்டின் இறுதியில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன், இந்த திட்டமானது சட்டமாக்கபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…