தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் பாலகிருஷ்ணா நடிக்கும் தெலுங்கு படத்தில் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல்.
தமிழில் மட்டுமல்லாது, மற்ற மொழி திரைப்படங்களிலும் தனது நடிப்பாற்றலை பிரமாதமாக வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியான உப்பெண்ணா திரைப்படம் அங்கே பெரிய வெற்றியடைந்தது. இந்த திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் அவர் நடித்து இருந்தார்.
தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க கேட்டுள்ளாராம். தெலுங்கில் ரவிதேஜா நடிப்பில் வெளியாகி இரண்டாவது அலை வருவதற்கு முன் வெளியாகி நல்ல வெற்றியை பதிவு செய்த க்ராக் திரைப்படத்தின் இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கும் படத்தில் பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் தான் வில்லனாக விஜய் சேதுபதியை கமிட் செய்ய படக்குழு முயற்சி செய்து வருகிறதாம்.
ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் பிரமாண்டமாக தயாராகி 5 மொழிகளில் வெளியாக உள்ள புஸ்பா படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியை கேட்டுள்ளனர். ஆனால், சில காரணங்களால் நடிக்க முடியாமல் போகவே பகத் பாசில் தற்போது அந்த வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…