நயன்தாரா தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தில் ஊசி இல்லாமல் வெரும் கையில் ஊசி போடுவது போல் இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அந்த வகையில், தற்போது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலர் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று காலை தடுப்பூசி எடுத்துக் செலுத்திக்கொண்டனர் அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது.
இந்த நிலையில், அந்த புகைப்படத்தில் நயன்தாராவிற்கு தடுப்பூசி செலுத்தும் போது நர்ஸ் கையில் தடுப்பூசியே இல்லை என்றும், வெறும் விரல்களால் தடுப்பூசி போடுவது போல போஸ் கொடுத்துள்ளதாகவும் அந்த புகைப்படம் தற்போது சர்ச்சையாகி வருகிறது. இதனால் உண்மையில் நடிகை நயன்தாரா தடுப்பூசி செலுத்திக்கொண்டாரா என்று பல தரப்பிலிருந்து கேள்விகள் எழுந்துள்ளது.
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…