அசுரன், கர்ணன் படத்துடன் நான் எடுத்த திரௌபதியை ஒப்பிடாதீர்கள் – மோகன் ஜி ட்வீட்..!!

அசுரன் கர்ணன் வரப்போகிற சார்பட்டா போன்ற படங்கள் வெளியாகும்போது தயவு செய்து நான் எடுத்த திரௌபதி படத்துடன் ஒப்பிடாதீர்கள் என்று இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மோகன் ஜி திரௌபதி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் வெளியாகும் போதும் கடந்த 9 ஆம் தேதி வெளியான கர்ணன் திரைப்படம் வெளியான போதும் சில ரசிகர்கள் திரௌபதி படத்தை ஒப்பிட்டு வந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது இயக்குனர் மோகன் ஜி தனது ட்வீட்டர் பக்கத்தில் “அசுரன் கர்ணன் வரப்போகிற சார்பட்டா போன்ற படங்கள் வெளியாகும்போது தயவு செய்து நான் எடுத்த திரௌபதி படத்துடன் ஒப்பிடாதீர்கள் அந்த இயக்குனர்களோடு என்னை ஒப்பிடாதீர்கள். நான் ஏதோ என் அறிவுக்கு என் சக்திக்கு படம் எடுக்கிறேன். அவங்க பக்கத்துல கூட என்னால நிற்க முடியாது என்பதை தெளிவுப்படுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அசுரன் கர்ணன் வரப்போகிற சார்பட்டா போன்ற படங்கள் வெளியாகும்போது தயவு செய்து நான் எடுத்த திரௌபதியை ஒப்பிடாதீர்கள் அந்த இயக்குனர்களோடு என்னை ஒப்பிடாதீர்கள்.
நான் ஏதோ என் அறிவுக்கு என் சக்திக்கு படம் எடுக்கிறேன்..அவங்க பக்கத்துல கூட என்னால நிற்க முடியாது என்பதை தெளிவுப்படுத்துகிறேன்
— Mohan G kshatriyan ???? (@mohandreamerr) April 11, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025