வில் ஸ்மித்தை போலீஸ் கைது செய்ய தயாராக இருந்தது – ஆஸ்கார் குழு!

திங்கள்கிழமை அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கார் விருது விழாவின் போது பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் அவர்கள் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது வில் ஸ்மித் அவர்களின் மனைவியாகிய ஜடா ஸ்மித்தை நக்கலடித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த வில் ஸ்மித், மேடையில் ஏறி சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார். இந்த நிகழ்வு ஆஸ்கார் விருது விழாவில் இருந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், உலகில் உள்ள பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
இந்நிலையில் வன்முறை என்பது எந்த விதத்திலும் தவறானது தான், என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என வில் ஸ்மித் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளிப்படையாக கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பும் கேட்டு இருந்தார்.
இந்இது தொடர்பாக தற்போது ஆஸ்கார் குழு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. அதன்படி கிறிஸ் ராக்கை வில் ஸ்மித் மேடையில் வைத்து அறைந்த உடனேயே, அவரை கைது செய்வதற்கு போலீஸ் தயாராக இருந்ததாகவும், ஆனால் கிறிஸ் ராக் வேண்டாம், நான் நன்றாக தான் இருக்கிறேன் என போலீசாரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!
February 12, 2025
“மைக்கை நீட்டினால் எதையாவது உளறுவது” – விஜய்க்கு பணக்கொழுப்பு என கூறிய சீமானுக்கு தவெக பதிலடி!
February 12, 2025
ஐபிஎலில் விளையாடுவாரா சஞ்சு சாம்சன்? ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை.! வெளியான தகவல்..,
February 12, 2025
INDvENG : புரட்டி எடுத்த சுப்மன் கில்..இங்கிலாந்துக்கு இந்தியா வைத்த பெரிய இலக்கு!
February 12, 2025