“பொன்னியின் செல்வன்” படம் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லையா..?

பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தை டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு பொங்கலிற்கு வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், அமிதாப் பச்சன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான், ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
இந்த படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கான படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து தொடங்கப்பட்டது. அதற்கு பிறகு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் இந்த வரும் ஜனவரியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து மீண்டும் தொடங்கப்பட்டது.
அந்த படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ரஹ்மான், பார்த்திபன் உள்ளிட்ட ஒரு சில நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர் .ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளார் மணிரத்னம்.
இந்த நிலையில் இந்த திரைப்படம் விரைவில் முடித்து தீபாவளிக்கு திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது இதற்கான ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது, படத்தின் வேலைகள் அதிகமாக இருப்பதால் இந்த படத்தை டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு பொங்கலிற்கு வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025