கிராமத்து இளைஞனாக களமிறங்கும் பிரேம் ஜி! இயக்குனர் யார் தெரியுமா?!

Published by
மணிகண்டன்
  • நடிகர் இசையமைப்பாளர் பிரேம் ஜி தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான படங்களில் மட்டுமே பெரும்பாலும் நடித்து வந்தார்.
  • இவர் தற்போது கிராமத்து பின்னணியில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். இப்பட ஷூட்டிங் அருப்புக்கோட்டையில் நடைபெற உள்ளது.

இசையமைப்பாளர் இயக்குனர் கங்கை அமரனின் மகனும், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான நடிகர் இசையமைப்பாளருமான பிரேம் ஜி அமரன். படங்களில் அதிகமாக தற்போது நடிப்பதில்லை. வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

தற்போது முதல் முறையாக முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தை சுரேஷ் தங்கையா இயக்க உள்ளார். இவர் விதார்த் நடித்த ஒரு கிடாரியின் கருணை மனு படத்தை இயக்கி நல்ல இயக்குனர் என பெயரெடுத்தவர்.

பிரேம் ஜி நாயகனாக நடிக்கும் படம் முழுக்க அருப்புகோட்டையில் நடைபெறும் படி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தில் 80 வயது பாட்டி ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்பட ஷூட்டிங்கை 30 நாளில் முடித்து விட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஆண்டனி தாசன் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளாராம். விரைவில் இப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

நான்தான் பாமக தலைவர்.! ‘பாமக தனி நபரின் சொத்தும் கிடையாது’ – அன்புமணி திட்டவட்டம்.!

சென்னை : நேற்றைய தினம் அன்புமணிக்கு பக்குவமோ, தலைமைப் பண்போ இல்லை என்றும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்றும்…

16 minutes ago

திலகபாமா நீக்ககிய ராமதாஸ்.., ‘பாமக பொருளாளராக தொடர்வார்’ – அன்புமணி அதிரடி அறிவிப்பு.!

சென்னை : ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் அதிகரித்த நிலையில், திலகபாமா அன்புமணிக்கு ஆதரவாக இருந்தார். இந்த நிலையில், பாமக…

36 minutes ago

ஆர்பிஐ நியூ ரூல்ஸ்: நகைக்கடன் விதிகளை தளர்த்த மத்திய அரசு பரிந்துரை.!

டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மாதம் தங்கக் கடன் வாங்குவது தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்டது.…

52 minutes ago

”கொள்ளையடித்த பணத்தை வண்டி வண்டியா கொட்ட போறாங்க” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று…

4 hours ago

தாய்லாந்தில் இந்தியரை தாக்கிய புலி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ.!

பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…

4 hours ago

த.வெ.க கல்வி விருது விழா: மணக்க மணக்க தயாராகும்தடபுடல் விருந்து..!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற உள்ளது. இந்த…

4 hours ago