சூப்பர் ஸ்டார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள், ட்ரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய ரஜினிகாந்த் , அமிதாப்பச்சன் என்னிடம் மூன்று அறிவுரைகளை கூறி பின்பற்ற சொன்னார். முதலில் தினமும் உடற்பயிற்சி செய், உன் மனதிற்கு பிடித்ததை செய் பிறர் என்ன நினைப்பார்களோ என பார்க்காதே. அரசியலில் நுழையதே என கூறினார்.
அவர் கூறிய இரண்டு விஷயங்களை பின்பற்றி வருகிறேன் மூன்றாது விஷயத்தை சூழ்நிலை காரணமாக பின்பற்ற முடியவில்லை. என கூறினார். நான் நிறையை கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன். இன்னும் நடிக்காமல் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் என்றால் அது திருநங்கை கதாபாத்திரம் தான். எனவும், போலீஸ் கதாபாத்திரம் என்றால் நேர்மையாகவும், மிகவும் நல்லவராகவும் நடிக்க வேண்டும் ஆதலால் போலீஸ் கதாபாத்திரங்களை தவிர்த்து வந்தேன்.
ஆனால், முருகதாஸ் என்னிடம் கூறிய தர்பார் கதை போலீஸ் கதாபாத்திரங்களில் வித்தியாசமாக இருந்தது. அதனால் விருப்பப்பட்டு நடித்தேன் என கூறினார்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…