சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று கோலாகலமாக கொண்டடி வருகின்றனர். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் காதல் பற்றி அவருடன் நடித்த ஒரு நடிகர் தேவன் அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகர் தேவன், பாட்ஷா படத்தில் நாயகி நக்மாவிற்கு அப்பாவாக நடித்திருப்பார். அவர் ராஜியுடனான சந்திப்பின் போது ரஜினி கூறிய அவரது முதல் காதல் பற்றி விவரித்தார்.
ரஜினிகாந்த் பேருந்து நடத்துனராக பெங்களூருவில் பணியாற்றிய போது அவரது பேருந்தில் ஒரு மருத்துவ மாணவி தினமும் பயணிப்பாராம். அந்த பெண் தான் ரஜினியிடம் , நான் உங்கள் நாடகங்களை பார்த்துள்ளேன். நீங்கள் நடிக்க செல்லுங்கள் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நிச்சயம் பெரிய நடிகராக வலம் வருவீர்கள் என ரஜினியிடம் கூறினாராம்.
மேலும், ரஜினி சென்னை செல்ல பணம் கொடுத்து உதவினாராம். அவருக்காக விண்ணப்பம் கொடுத்திருந்தாராம். அதன் பின்னர்தான் ரஜினி சென்னை வந்து திரைப்பட கல்லூரியில் சேர்ந்தாராம். இதனை நடிகர் தேவன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். மேலும், இந்த சம்பவத்தை ரஜினி, தேவனிடம் கூறுகையில் ரஜினி மிகவும் வருந்தினாராம். ஏனென்றால் ரஜினி தற்போது வரை அந்த பெண்ணை பார்க்கவில்லையாம். அந்த பெண்ணும் ரஜினியை வந்து பார்க்கவில்லையாம்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…