நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த திரிஷாவின் ‘சதுரங்க வேட்டை 2’ ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2014ல் எச். வினோத் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் சதுரங்க வேட்டை. அதன் வெற்றியை தொடர்ந்து சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தை விஜய் ஆண்டனியின் ‘சலீம்’ படத்தை இயக்கிய என். வி. நிர்மல் இயக்கியுள்ளார். நடிகர் மற்றும் தயாரிப்பாளரான மனோபாலா தயாரித்துள்ளார். நடிகை திரிஷா மற்றும் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அவர்களுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், நாசர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டு ரிலீஸ் செய்யவிருந்த இந்த படம் சில பொருளாதார பிரச்சினை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தை ஓடிடி பிளாட்பாரமான அமேசான் பிரேமில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…